TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எரித்திரிய விமான நிலையம் புலிகளின் நிர்வாகத்தில்!

Eritreaஎரித்திரியத் தலைநகர் அஸ்மாராவில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறை தகவல் பரப்பிவிட்டுள்ளது.

அத்துடன், எரித்திரிய அதிபர் இசையாஸ் அவ்வேர்க்கி அவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பேணி வந்ததாகவும், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாளன்று கையொப்பமிடப்பட்ட தொலைநகல் ஒன்றை எரித்திரிய அதிபருக்கு தமிழீழ தேசியத் தலைவர் அனுப்பி வைத்ததாகவும் சிறீலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதேபோன்று பாகிஸ்தானின் பெஷவார் நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசிய மறைவிடம் ஒன்று இயங்கியதாகவும் சிறீலங்கா புலனாய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் தென்னிலங்கையில் இயங்கி வரும் சிங்கள ஊடகவியலாளர்களின் வாயிலாகப் பரப்பி விடப்படுவதோடு, இது தொடர்பான பரப்புரைகளை கலாநிதிப் பட்டப் படிப்பிற்கான ஆய்வு என்ற போர்வையில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள சாணக ஜெயசேகர என்ற சிங்கள எழுத்தாளர் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பான அந்தரங்க தகவல்கள் என்று கூறி அண்மையில் மேலைத்தேய பல்கலைக் கழகம் ஒன்றில் சாணக ஜெயசேகர சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை ஒன்று, புலமைத்துவம் அற்றது என்று காரணம் காட்டி அரசறிவியல் பேராசிரியர்களால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News
Tag: ,

Your email address will not be published. Required fields are marked *

*