TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சீனாவுடன் மோதல் வருமா?:எல்லையில் விமானங்களை குவிக்கிறது இந்தியா

இந்தியா – சீனா இடையே 1962ம் ஆண்டு போர் நடந்தது. அதில் இந்திய படைக்கு சீனா பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன் பிறகு இந்தியாவுடன் இணைந்த பகுதியான சிக்கிம் மாநிலத்துக்கு சீனா சொந்தம் கொண்டாடி வந்தது.

2003ம் ஆண்டு அதை கைவிட்டு விட்டு அருணாசலப் பிரதேசத்துக்கு சொந்தம் கொண்டாடியது. அருணாசலப் பிரதேசத்தின் 90,000 சதுர கி.மீ. பரப்பளவு (ஏறத்தாழ அருணாசலப் பிரதேசம் முழுவதும்) தங்களுக்கு சொந்தமானது என்று சீனா கூறி வருகிறது.

அருணாசலப் பிரதேசத்துக்கும் சீனாவுக்கும் இடையே 1,030 கி.மீ. தூரம் பொதுவான எல்லை இருக்கிறது.

வெள்ளையர் ஆட்சி காலத்தில் அங்கு ‘மக்மோகன் லைன்’ என்ற கற்பனையான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வரையப்பட்டது. ஆனால், அதை எல்லையாக சீனா ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த (2008) ஆண்டு மட்டும் 270 முறை இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்து மீறி புகுந்து உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 60 முறை அத்து மீறல்கள் நடந்து இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அருணாசலப் பிரதேசத்தில் சீன ராணுவம் அடிக்கடி புகுந்து உள்ளது. இப்போது அருணாசலப் பிரதேசம் எங்களுக்கே சொந்தம் என்று சீனா அழுத்தமாக கூறி வருகிறது. இதனால் சீனா எந்த நேரமும் அருணாசலப் பிரதேசத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு ஏற்பட்டு விட்டது.

அதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அருணாசலப் பிரதேசம் அருகில் உள்ள அசாம் மாநிலத்தின் தேஷ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் 18 போர் விமானங்களை நிறுத்தும் முயற்சியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது.

வரும் 15ம் தேதி முதல் கட்டமாக 4 சுகோய்-30 எம்.கே.ஐ. ரக போர் விமானங்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு மேலும் 14 சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்கள் அனுப்பப்பட்டு அங்கு ஒரு ‘ஸ்குவாட்ரன்’ நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்படும்.

இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த விமானங்கள் இந்திய விமானப் படையில் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. இவை அணு குண்டுகளை சுமந்து செல்லக் கூடியவை.

தேஷ்பூரில் இருந்து தாக்குதல் தூரத்தில்தான் சீன எல்லை இருக்கிறது. சீன எல்லையை ஒட்டி மேலும் பல விமான தளங்களை அமைக்கவும் விமானப் படை முடிவு செய்து இருக்கிறது. இந்த தகவலை விமானப் படை செய்தி தொடர்பாளர் கர்னல் ஆர். கலியா தெரிவித்தார்.

இந்தியாவின் ஆயத்த நிலையை பார்க்கும் போது சீனாவுடன் மோதல் வருமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News

Your email address will not be published. Required fields are marked *

*