TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ராணுவ ஆயுதக்கிடங்கு எரிகின்றது:மிரட்சியில் வன்னி!

இலங்கை வன்னியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் ஆயுதகிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி மாலை 5.45 மணி முதல் பெரிய வெடிச் சத்தத்துடன் ஜோசெப் இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கு வெடித்து எரிகிறது என்று இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழு வவுனியாவும் இருளில் மூழ்கியுள்ளதாகவும், வவுனியா வான் பரப்பு கரும் புகை மண்டலமாக இருப்பதாகவும் வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோசெப் முகாமில் வெடித்துச் சிதறும் துண்டுகள் வவுனியா பண்டாரிக்குளம், மத்திய நகரம் மற்றும் வைத்திய சாலை மீது வந்து வீழ்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்பு யாழ்ப்பாண பலாலி இராணுவ முகாமில் உள்ள ஆயுத கிடங்குகள் வெடித்து சிதறியது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*