TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இடம்பெயர்ந்த மக்களின் விவகாரத்தில் சர்வதேசம் தலையிட வேண்டும்: மங்கள சமரவீர

mankalaஇடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் விவகாரத்தில் உடனடியாக சர்வதேசம் தலையிடவேண்டும். இல்லாவிடின் வரலாற்றில் சர்வதேசம் பொறுப்புக்குக் கூறவேண்டிய நிலைமை ஏற்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெவித்தார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் மீள்குடியேற்றாமல் இருக்கும் விவகாரம் தற்போது சர்வதேச விவகாரமாக மாறியுள்ளது. சர்வதேசத்துக்கு இவ்விடயத்தில் பொறுப்பு உள்ளது.

1989 ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்தின் அராஜகங்களை எதிர்த்து ஜெனிவா அல்ல நகரத்துக்கும் செல்வதற்கு தயார் என்று அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தெவித்தார்.

அவ்வாறு கூறிய எனது நண்பனின் வழிகாட்டலில் இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் நான் சர்வதேசத்துக்கு சென்று முறையிடுவேன். தனிமையிலாவது இந்த நடவடிக்கையை நான் மேற்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய நூலக சபை கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் கூறியதாவது: சுமார் மூன்று இலட்சம் மக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. இது தேசிய பிரச்சினை என்று மனோகணேசன் எம்.பி. தெவித்தார். ஆனால் இது சர்வதேச பிரச்சினை என்பதனை வலியுறுத்துகின்றோம்.

அரசு அகதி மக்கள் தங்கியுள்ள இடங்களை நலன்புரி முகாம்கள் என்று தெவித்துள்ளது. ஆனால் அதனை அவ்வாறு எங்களால் கூற முடியாது. மேலும் ஆங்கிலத்தில் ஐ.டி.பி. என்று கூறப்படுகின்றது. ஆனால் நான் எவ். டி.பி. என்று கூறுகின்றேன். அதாவது பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் என்பதாகும்.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து கிழக்கில் முகாம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அங்கு முட்கம்பி வேலிகள் இருக்கவில்லை. மக்கள் நடமாடும் சுதந்திரம் காணப்பட்டது.

ஆனால் இங்கு அவ்வாறு இல்லையே…. தாய் ஒரு இடத்தில் மகன் மற்றுமொரு இடத்தில்.. நாங்கள் கடந்த மூன்று மாதங்களாக அகதி மக்கள் தொடர்பில் சில விடயங்களை வலியுறுத்தி வருகின்றோம்.

அதாவது நடமாடும் சுதந்திரம் வழங்கப்படல், மக்களை முறையாக பதிவு செய்தல், 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெவிக்கப்படுகின்றமை குறித்து ஆராய்தல், மக்களை மீண்டும் ஒன்றிணைத்தல், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல், தகவல் பெறும் உரிமையை உறுதிபடுத்தல் மற்றும் சர்வதேச நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக மீள்குடியேற்றவேண்டும்.
1939 ஆம் ஆண்டு ஜேர்மனியில் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. அதன்போது ஊடகங்கள் உட்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் 1943 ஆம் ஆண்டு இரண்டாவது உலக யுத்தம் முடிவடைந்த பின்னர் ஊடகங்கள் குறித்த முகாம்களுக்கு சென்றன. அப்போதுதான் குறித்த முகாம்களில் இலட்கணக்கானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெயவந்தது.

அகதிகள் விடயத்தில் அரசாங்கம் கூறிக்கொண்டிருப்பதை நம்பிக்கொண்டிருக்க சர்வதேசம் தயாரில்லை. அகதிகள் விடயத்தில் சர்வதேசத்துக்கும் பொறுப்பு உள்ளது. எனவே அகதிகள் விடயத்தில் சர்வதேசம் உடனடியாக தலையிடவேண்டும். இல்லாவிடின் இவ்விவகாரத்தில் வரலாற்றில் சர்வதேசம் பொறுப்புக்கூறவேண்டிய நிலைமை ஏற்படும். சர்வதேசம் தனது பொறுப்பை நிறைவேற்றவேண்டும். என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*