TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பாக்கியசோதி சரவணமுத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கடுமையாக விசாரணை

saசிறிலங்காவின் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், மனித உரிமைகள் ஆர்வலருமான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இன்று சிறீலங்கா குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றுக்குப் பயணம் செய்துவிட்டு நாடு திரும்பியபோது, அவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வாதடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வார்னூர்தி நிலைய அதிகாரிகள் பாக்கியசோதி சரவணமுத்துவை தடுத்து வைத்து குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் பிறிதொரு இடத்திற்கு அழைத்துச்சென்று அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக பாக்கியசோதி சரவணமுத்து அண்மையில் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*