TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இரவோடுரவாக வாகனங்களில் ஏற்றப்படும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இளையோர்–அதிர்சி தகவல்


வவுனியாவிலுள்ள வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளோர் காணாமல் போகும் சம்பவங்கள் நாள் தோறும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் கணிசமானவர்கள் இரவோடுரவாக வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக உள்ளிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகாம்களில் வடிகட்டும் ஒரு நடவடிக்கையாக அரச தரப்பின் படைத்தரப்பு இதனை மேற்கொண்டு வருவதாக முகாமில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கதிர்காமர் முகாம் ஆனந்தகுமாரசாமி முகாம் என்பவை தற்போது படையினரால் ஓரளவுக்கு ஏற்கனவே வடிகட்டப்பட்டு விட்டதாக தொடர்புடையவர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது அருணாசலம் முகாம் உள்ளிட்ட ஏனைய முகாம்களில் உள்ளவர்களை இரவோடிரவாக முகாம்களில் இருந்து அப்புற்ப்படுத்தும் நடவடிக்கையை படைத்தரப்பு மேற்கொண்டுள்ளது.

அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் படையினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நபர்களை உடனடியாக சரணடையுமாறு இரவு பகலாக அறிவித்த வண்ணமேயுள்ளனர். அவ்வாறு சரணடையாதவிடத்து அவர்களின் கைது செய்யப்படுமிடத்து அவர்களுக்கு மன்னிப்பேதும் வழங்கப்பட மாட்டாது என படையினரால் பிரச்சாரப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் படைத்தரப்பின் அறிவித்தல்களை அடுத்து நேரடியாக சென்று சரணடைந்தவர்கள் அல்லது தம்மை வெளிப்படுத்தச் சென்றவர்கள் பின்னர் முகாம்களுக்குத் திரும்பவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் அப்பகுதியிலேயே மடக்கப்பட்டு இரவோடிரவாக வாகனங்களில் ஏற்றப்பட்டுச் செல்வதாகவும் எனினும் அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள் என்பது குறித்து தம்மிடம் தகவல் இல்லை என அவர்கள் அரச சார்பற்ற அமைப்புப் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.

அங்கு சென்ற அரச சார்பற்ற அமைப்புப் பிரதிநிதிகள் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் ஆயிரக் கணக்கானவர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தமக்கு தொடர்ந்தும் தகவல்கள் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு முகாம்களில் இருந்து இரவோடிரவாக அகற்றப்படுபவர்கள் உயிருடன் இருக்கின்றனரா அல்லது இல்லையா என்பது பற்றிக் கூட உறுதிப்படுத்த முடியாத நிலையில் அவர்களது குடும்பங்கள் மோசமான பின்னடைவைச் சந்திதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பலர் உளவியல் ரீதியாக பாதிகக்ப்பட்ட நிலையில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் அல்லாது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட அமைப்புகளில் ஊழியத்திற்கு பணியாற்றியவர்கள் கூட இவ்வாறு காணாமல் போனவர்களில் பெருமளவில் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச சார்பற்ற அமைப்புக்களின் நடவடிக்கைகளை இம்முகாம்களில் மட்டுப்படுத்தியமை இதனோர் ஒரு நடவடிக்கையாக இருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். பொது மன்னிப்பு எனும் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட பின்னர் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் முகாம்களுக்கு புகார் கொடுக்கச் செல்பவர்கள் குடும்பத்தவருடன் சென்றாலும் குடும்பத்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னரே இரவோடு இரவாக காணாமல் போகச் செய்வதாக கூறப்படுகின்றது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*