TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கொடூர கொலைகள் வீடியோ விவகாரம்:நார்வே, ஐ.நா. மீது இலங்கை கடும் அதிருப்தி

250809 001சிங்கள அரசு தன்மீது சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் குறித்த அதிருப்தியை ஐக்கிய நாடுகள் சபையிடமும் நார்வேயிடமும் வெளிப்படுத்தவுள்ளது என்று இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கான நார்வேத் தூதுவர் டொரர் ஹட்டேம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தொடர்பாளர் பிலிப் அஸ்டன் ஆகியோரிடம் அமைச்சர் மகிந்த சமரசிங்க அதிருப்தியை வெளிப்படுத்துவார் என்றும் தககல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாரத்தில் கொழும்பில் உள்ள நோர்வேத் தூதுவர் டொரர் ஹட்டேமைச் சந்திக்கவுள்ள மனித உரிமைகள் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க அவரிடம், தமிழர் படுகொலை வீடியோ காட்சிகள் குறித்து சொல்ஹெய்ம் தெரிவித்த கருத்துத் தொடர்பாக விளக்கம் கேட்க உள்ளார்.

சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நீதிக்கும் புறம்பான படுகொலை குறித்த காட்சிகள் அந்த வீடீயோவில் அடங்கியிருந்தன.

அதன் நம்பகத்தன்மை குறித்து உடனடியாக சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று நோர்வேயின் சுற்றுச்சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருந்தார்.

இந்த வாரம் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளச் செல்லும் சமயம் அக்கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வரும் அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை நேரில் சந்தித்து இது குறித்து மகிந்த சமரசிங்க பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அமைச்சர் சமரசிங்க கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும் அவருக்குப் பதிலாக அவரது பிரதிநிதியே கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

செப்டம்பர் 13 ஆம் தேதி தொடங்க உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத் தொடரின்போது சபையின் சிறப்பு தொடர்பாளர் பிலிப் அஸ்டனை தனிப்பட்ட முறையில் சந்தித்து குறிப்பிட்ட காணொலி குறித்து அமைச்சர் மகிந்த சமரசிங்க பேச உள்ளார்.

சிங்களப் படையினரின் கொடுமையான அட்டூழியங்கள் என வர்ணிக்கப்படும் அந்த வீடீயோ தொடர்பில் பிலிப் அஸ்டன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு கொண்டுள்ள அதிருப்தியை கடும் தொனியில் தெரிவிப்பதற்கும் அமைச்சர் தீர்மானித்துள்ளார்.

இதற்கிடையே, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து அந்தக் காணொலி சோடிக்கப்பட்ட ஒன்று என்பதும் விடுதலைப் புலிகளால் வேண்டும் என்றே தயாரிக்கப்பட்டது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா தரைப்படைப் பேச்சாளர் உதய நாணயக்கார நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News

Your email address will not be published. Required fields are marked *

*