TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ராஜபக்சேவுக்கு உதவ தயார்:த.தே.கூ. முன்வந்துள்ளது

TamilNational_Sampanthanஇலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் விசயத்தில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் மக்களையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் மீளக்குடியமர்த்துவதே தற்போதைய முக்கிய தேவை என்று தெரிவித்தார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் என்றும் த.தே.கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் அமைச்சரவை உறுப்பினருமான லியாம் பொக்ஸ் தனது பயணத்தின்போது அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார். யாழ்ப்பாணத்துக்கும் அவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அரச தலைவரில் மாற்றங்கள் ஏதும் தெரியவில்லை. எனினும் அவர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அவர் நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் முன்நகர்வதற்கு எமது உதவியை லியாம் பொக்ஸ் கோரினார்.

அதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம் எனப் பதிலளித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார் சம்பந்தன்.

முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உதவியாக நாட்டின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் லியாம் பொக்ஸ் ஈடுபட்டார்.

இதனை அடுத்து இரு கட்சிகளுக்கும் இடையில் லியாம் பொக்ஸ் உடன்படிக்கை ஒன்றும் எற்படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் அது தோல்வியில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் முயற்சிகளுக்கான ஆதரவை பிரித்தானிய அரசு வழங்கும் என்று லியாம் பொக்ஸ் தெரிவித்தார் என்றும் தமிழ்க் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag: ,

Your email address will not be published. Required fields are marked *

*