TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிங்கள அரசை விமர்சித்த ஊடகவியலாளருக்கு 20 வருட சிறை

tissainayagamஊடகவியலாளர் திசநாயகம் ஆங்கில இணைத்தளம் ஒன்றை நடத்தி வந்தார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான ‘சண்டே ரைம்சிலும் பத்திகளை எழுதி வந்தார். 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அவர் எழுதிய கட்டுரைகளில் அரசை பகிரங்கமாக விமர்சித்து வந்தார்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசு ஒர் ஆயுதமாகப் போரில் பயன்படுத்துவதாக அவர் அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இணையதளம் நடத்தினார் என்றும், பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவு இணையத்தளமான தமிழ்நெட்டுக்கு அவர் செய்திகளை வழங்கி வந்தார் என்றும் சிங்கள அரசு திசநாயகம் மீது குற்றம்சாட்டியது.

இக்குற்றச்சாட்டின் கீழ் கடந்த 14 மாதங்களாக அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை விடுவிக்கும்படி அனைத்துலக ஊடக அமைப்புக்களும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன.

திசநாயகத்தின் கட்டுரைகள் பயங்கரவாத தடைச் சட்டங்களை மீறியுள்ளன. ஏனெனில் அவற்றின் நோக்கம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை குலைப்பதாகவே இருந்தது என உயர்நீதிமன்ற நீதிபதி தீபாளி வியஜசுந்தர தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தனது வெளியீடுகளுக்காக திசநாயகம் பணம் திரட்டிய வழிவகைகளும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீறுபவையாக இருந்ததால் அவர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் 1982 ஆம் ஆண்டில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து அதன் கீழ் தண்டிக்கப்பட்டுள்ள முதல் நபர் திசநாயகம். 48வயதாகும் திசநாயகத்திற்கு 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக முறையிடப் போவதாக திசநாயகத்தின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News
Tag:

Your email address will not be published. Required fields are marked *

*