TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வன்னி நிலப்பரப்பில் 85 விழுக்காடு நிலப்பரப்புகளை அபகரிக்க அரசாங்கம் சூழ்ச்சி – மங்கள சமரவீர

mangala-samaraweeraவன்னி மக்களுக்குச் சொந்தமான 85 வீத நிலப்பரப்புக்களை அபகரிக்கும் சூழ்ச்சித்திட்டத்தில் சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இன்று சிறீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வன்னி நிலப்பரப்புகளில் சிங்களவர்களை சிறீலங்கா அரசாங்கம் குடியேற்றி வருகின்றது. இது எங்கே போய் முடியப் போகின்றது என்பது சந்தேகமாக உள்ளது.

இந்த நிலையில் வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டோரை 180 நாட்களுக்குள் மீளக்குடியமர்த்துவது என்ற நடவடிக்கை எப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரம் சந்தேக நபர்கள் இருப்பதாக கூறுகின்ற அரசாங்கம் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் பேரை பழிவாங்குவது நியாயமற்றது.

அப்பாவித் தமிழ் மக்களின் நரக வேதனை குறித்து மனசாட்சியுள்ள ஒவ்வொரு சிங்களவரும் சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*