TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச விசாரணை அவசியம்: சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

HRஇலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை சுட்டுக்கொல்லப்படுவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

இலங்கை ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போரின் போது, இரண்டு தரப்பும் மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டன என்ற குற்றச்சாட்டையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுமத்தியுள்ளது.

இந்த வீடியோ 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை படைவீரர் ஒருவரால் தமது செல்போன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு இலங்கை படையினரால் சுட்டுகொல்லப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.

இது 1949 ஆம் ஆண்டு ஜெனிவா உடன்படிக்கையின் சரத்து மூன்றில் கூறப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான நியதிகளை மீறும் செயலென மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டியுள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்த போர் புலிகளுக்கு எதிரானதென கூறும் நிலையில் இந்த வீடியோ படம் மாறுப்பட்ட விதத்தில் அமைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐக்கிய நாடுகளின் பணிப்பாளர் ஸ்டீவ் கிரே சோவ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை சுயாதீன சர்வதேச ஆணைகுழுவொன்றை அமைத்து இதனை விசாரணை செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*