TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழீழ நீதிமன்றங்கள் இருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவில் சிங்கள நீதிமன்றங்கள்

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழ் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கு முன்னரே அங்கு நீதிமன்றங்களை திறப்பதற்கு இலங்கை நீதித்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

கிளிநொச்சியில் உயர் நீதிமன்றமும் நீதவான் நீதிமன்றமும் முல்லைத்தீவில் நீதவான் நீதிமன்றம் திறக்கப்பட உள்ளன என நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது இந்தப் பகுதிகளுக்கு உரிய வழக்குகள் எல்லாம் வவுனியா நீதிமன்றத்திலேயே நடைபெற்று வருகின்றன.

இந்தப் பகுதிகளில் முன்னர் விடுதலைப் புலிகள் தமது தமிழீழ நீதிமன்றங்களை அமைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*