TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை கிழக்கு மாகாணத்துக்கு புதிய கொடி

இலங்கை கிழக்கு மாகாணத்துக்கு என புதிய பகுதி கொடி உருவாக்கப்பட உள்ளது. அங்கு வாழும் மூவின மக்களையும் முக்கியத்துவப்படுத்தும் வகையில் இந்த புதிய கொடி அமையவிருக்கிறது.

கிழக்குப் பகுதியில் வாழும் இனக் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கூறுகளை உள்ளடக்கியதாக புதிய கொடி வடிவமைக்கப்படும் என கிழக்கு மாகாண சபைத் தலைவர் முகமட் பாய்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மாகாண சபைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொடியை வடிவமைப்பதற்கு என அறிஞர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*