TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறீலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து மருத்துவர்களில் நால்வர் பிணையில் விடுதலை

Tamil_doctorsசிறீலங்கா குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த ஐந்து மருத்துவர்களில் மூவர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இறுதி யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் கடமையாற்றிய மருத்துவர்களை சிறீலங்காப் படையினர் கைது செய்திருந்தனர்.

மருத்துவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் மனித உரிமை அமைப்புகள் உட்பட அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறீலங்காவுக்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கபட்டன.

இந்த நிலையில் இன்று கொழும்பு பிரதம நீதியாளரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பிணை விடுவிப்பு விசாரணையில் நான்குமருத்துவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி வைத்திய அதிகாரி சி சத்தியமூர்த்தி, முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி டி பி சண்முகராஜா, இளஞ்செழியன் பல்லவன், மற்றும் கிருஸ்ணராஜா வரதராஜா ஆகியோரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரையும் 10 லட்சம் ரூபா சரீர பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிமன்ற நீதியாளர் உத்தரவிட்டுள்ளார்

இவர்கள் வவுனியாவை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வவுனியாவில் உள்ள குற்றத் தடுப்பு பிரிவினரிடம் சென்று கையெழுத்து போட வேண்டும் என நீதியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மோதல் பிரதேசங்களில் மக்கள் மீது சிறீலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களை இவர்கள் அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் சிறீலங்கா அரசாங்கத்தின் போhக் குற்ற நடவடிக்கைகள் தொடர்பில் விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே பொய்யான தகவல்களை வழங்கியதாக சிறீலங்காவின் இவர்களை வைத்து தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கியது.

இவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபை மக்கள் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*