TamilSpy

பொழுது போக்கு இணையம்…

20 வருட காலத்திற்கு ஜனாதிபதி ஆட்சி நடத்துவார்

mahinஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலம் இரண்டு தசாப்தங்கள் ( 20 வருடங்கள்) வரையில் நீடிக்கும் என நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கண்டி குண்டசாலைப் பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி இரண்டு தசாப்தங்கள் ஆட்சி நடாத்துவதனை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டக் கூடிய ஓரே தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குண்டசாலை தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளராக அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*