TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நாள் வாழ்வு திரைப்படமாக வருகிறது.

hitlerஹிட்லரின் கடைசிநேர முடிவு தற்கொலை அல்ல..
உலக யுத்த கிளைமாக்சின் நேரங்களே கிளைமாகஸ்…

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது சர்வாதிகாரி ஹிட்லர் எவ்வாறு மரணித்தார் என்பது இப்போதும் புதிராகவே இருந்து வருகிறது. இந்த வகையில் கடைசியாக வந்த உன்ராக்கன் என்ற ஜேர்மன் மொழிப்படம் நிலத்தடி அறையில் போரின் கடைசி விநாடிகளில் எத்தகைய உணர்வுகளை பிரதிபலித்தார் என்பதை அழகுபட வெளியிட்டிருந்தது. அப்படத்திற்கு பல சர்வதேச விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. இப்போது சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் இடம் பெற்ற கடைசி நிமிடங்களே மிகமிக சுவாரசியமானவை. இவற்றை விநாடிக்கு விநாடி பரப்பு தரும் வகையில் திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார் பிரபல கொலிவூட் திரைப்பட இயக்குநர் குவான்ரின் ரறன்ரினோ. உண்மையான படங்களையும் தகவல்களையும் இணைத்து போரின் கிளைமாக்ஸ்சை எப்படி திரைப்படம் முழுவதும் கிளைமாக்ஸ்சாக மாற்றுவது என்பதே இவரது புதிய முயற்சியாகும். இதுவரை சர்வாதிகாரி ஹிட்லரின் முடிவுபற்றி யாரும் அறியாத புதிய தகவல்களை, சொல்லப்படாத புதிய கோணத்தில் கூற இருக்கிறது இத்திரைப்படம். ஹிட்லரின் கடைசிநேர முடிவு தற்கொலை அல்ல என்ற வாதாட்டம் திரைப்படத்தில் வருமென கருத இடமிருக்கிறது. அப்படியானால் அவருடைய மரணத்திற்கு நேரடியாக காரணமாக இருந்தது யார் ? திரைப்படம் இப்பொழுதே பலருடைய ஆவலைத் தூண்டியுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*