TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை சமாதானத்தில் இருந்து போர் வரைக்கும் புத்தகம்: நிஜமா?

india-newsஇலங்கை சமாதானத்தில் இருந்து போர் வரைக்கும் என்று ஒரு புத்தம் தற்போது வெளியாகி பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்திலும் பத்திரிகைகளிலும் வெளியாகிய இச் செய்திகளை அடுத்து, இப் புத்தகம் பரபரப்பாக விற்பனையாகவுள்ளது. இலங்கைத் தமிழர்களை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கும் சிலர் இவ்வாறாக கதைகளை புத்தகமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். ஏதோ விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்று முழுதாக அழித்துவிட்டதாக ஒரு பிரம்மையை இந்தியா வெளிக்காட்ட விரும்புவதை இப் புத்தகம் எடுத்துக் காட்டுகிறது.

அப்படியே இந்தியா முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை அழிக்க இராணுவரீதியாக உதவியிருந்தால், தற்போது இலங்கை அரசானது இந்தியாவுடன் நன்றி பாராட்டியிருக்கும், மாறாக சீனா அல்லது பாக்கிஸ்தானிடம் உதவிகோரியிருக்காது. அத்துடன் சகல வழிகளிலும் இந்தியா உதவியிருந்தால் இந்தியா கே.பியை கையளிக்கக் கோரியபோது இலங்கை அவரை உடனே கையளித்திருக்கும், அத்துடன் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதள் போன்ற விடையத்தில் இலங்கை இந்தியாவிற்க்கு உதவி இருக்கும்.

காலத்திற்குக் காலம் இவ்வாறான சில சுயனலவாதிகள் தாம் முன் நாள் இராணுவ அதிகாரி என்றும், அரசியல்வாதி என்றும் மற்றும் உயரதிகாரி என்றும் கூறி ஓய்வுபெற்ற பின்னர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இவ்வாறு புத்தகங்களை எழுதுவது வழக்கம். இவற்றில் மிகச் சொற்பமானவையே, உண்மையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா உதவியது என்பது உண்மை, ஆனால் அதனை மிஞ்சும் அள்வுக்கு சீனாவும், பாக்கிஸ்தானும் உதவியது என்பதே உண்மை. அத்துடன் பசுபிக் பெருங்கடலில் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கப்பல்லில் இருந்து புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அவதானிக்கப்பட்டு பின்னர் அச்செய்திகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகிரப்பட்டன. அத்துடன் இந்தியக் கண்காணிப்பு பிரிவினர் தீவிரமாக செயல்பட்டு புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக் கொடுத்து அழித்தனர்.

இருப்பினும் ஆயுதக் குறைபாடு காரணமாக விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பது, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விடையம் அல்ல. கிளக்கில் இருந்து மேலதிக இராணுவத்தினரை வடக்கிற்கு நகர்த்தியது, இராணுவம் சிறு குழுக்களாக முன்னேறியது, இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் வன்னியில் ஊடுருவியது என்பன புலிகள் வெல்லப்பட்டதற்கான சில காரணிகள். இன் நிலையில், சிலர் சுயலாபம் கருதி பரபரப்பை ஏற்படுத்தி புத்தகத்தை விற்க முயலுகின்றனர் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் போராட்ட மன உறுதியைக் குலைக்கும் வகையில் இந்தியாவால் திட்டமிட்டு இவை வெளியிடப்படுகின்றது என்பதே யதார்த்தமாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*