TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கரணும், கத்ரீனா கபூரும் ஒரு அழகான விளம்பரம் (வீடியோ இணைப்பு)

இனிமேல் தனது பெயரை ‘கரணா’கபூர் என்று கூட மாற்றிக் கொள்வார் போலிருக்கிறது கரீனா கபூர். அஜீத், விஜய், விக்ரம், சூர்யாவெல்லாம் பார்த்து ஆவ் என்று ஆச்சர்யப்பட்ட கரீனா கபூர், நம்ம ஊர் கரணுடன் சேர்ந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருக்கிறார்.

புலி பசித்தாலும் புரோட்டா திங்காது என்கிற ரகம் கரண். வில்லன் நடிகராக இனி நடிப்பதில்லை என்று முடிவெடுத்த பின், அவரது பேங்க் பேலன்ஸ், பேலன்சே இல்லாமல் தடுமாறியது. அப்போதும் கூட இந்த சத்தியத்தை வாபஸ் வாங்கியதில்லை அவர். நினைத்திருந்தால் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்திருக்கலாம். வேஷ்டி விளம்பரத்திலேயே கோடிக்கணக்கில் துட்டு சேர்க்கும் இளம் ஹீரோக்கள் மத்தியில், அது வேட்டி வேலை இல்லை. வெட்டி வேலை என்று ஒதுங்கியவர் கரண்.

அப்படிப்பட்ட கரணிடம், கரீனாகபூருடன் நடிக்கலாம் என்றதும் இந்த விளம்பரத்தில் நடிக்க சம்மதித்தாராம். மகேந்திரா ரோடியோ என்ற இரு சக்கர வாகனத்தின் விளம்பரம் அது. முகம் நிறைய புன்னகை தவழ கரண், கபூரை ஓட்டும் அழகை கொஞ்சம் வேடிக்கைதான் பாருங்களேன்…

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Entertainment

Your email address will not be published. Required fields are marked *

*