TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பாகிஸ்தான் ராணுவத்திற்கு இலங்கை பயிற்சி

pakistanபாகிஸ்தான் ராணுவத்திற்கு தனது நாட்டில் இலங்கை ராணுவம் பயிற்சி அளிக்கவுள்ளதாக புதிய ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘டெய்லி மிரர்’ என்னும் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

புலிகள் இயக்கத்தை வீழ்த்தியுள்ளதால், இலங்கை ராணுவத்திடம் பயிற்சி பெற பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் பயிற்சி முகாம்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறியிருப்பதாக இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வடக்குப் பகுதியில் சீன அரசின் உதவியுடன் நிரந்தர ராணுவ முகாம்கள் உருவாக்கப்படும் என்றும் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*