TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலை புலிகள் பண உதவியா?: ராமதாஸ், நெடுமாறன் பதில்

rajiniநடிகர் ரஜினிகாந்த் விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்றிருப்பதாக, இலங்கை அமைச்சர் ரிசாட் பதியூதீன் கூறியுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவித்திருந்தன.

மேலும் அச்செய்திகளில், ரஜனிகாந்த், மற்றும் தமிழக அரசியல்வாதிகளான மதிமுக செயலர் வை.கோ, பா.மக. கட்சியின் தலைவர் ராமதாஸ் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெற்றிருப்பதாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்திருப்பதாக அச்செய்திகள் தெரிவித்திருந்தன.

புலம்பெயர் தேசங்களில் மக்களிடமிருந்து விடுதலைப்புலிகள் வசூலித்த பணத்தில், வெளிநாடுகளில், தமிழ் வானொலிச் சேவைகள், தொலைக்காட்சிச் சேவைகள், பொது வியாபார நிலையங்கள் என்பவற்றில் முதலீடு செய்துள்ளனர். இவ்வாறு புலிகளால் முதலீடு செய்யப்பட்ட ஊடகங்கள், இலங்கை அரசாங்கம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன. இதனை விடுத்து, புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைச் சிறுத்ததைகளின் தலைவர் தொல். திருமாவளவன், வைகோ, ராமதாஸ், நெடுமாறன் போன்ற தமிழக அரசியல் தலைவர்கள், ஆரம்ப காலம் முதலே தமிழீழ விடுதலைப் புலிகளிடம் நிதியுதவி பெற்று வந்ததாகவும், அது போலவே சில முன்னணி இயக்குனர்களிடம், திரைப்படங்களை இயக்குவதற்காக புலிகள் பணம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டதாக அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டனில் உள்ள தமிழர்கள் பெருந்தொகையான பணத்தை செலவிட்டு, தமிழகத்தில் தமிழத் திரைப்படங்களை தயாரித்துள்ளதாகவும், இந்த வகையில, சூப்பர் ஸ்டார், ரஜனிகாந்திற்கும் பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதன் கொடுப்பனவு விபரங்கள் தெரியவில்லை எனவும், அதே போல் வெளிநாடுகளில் இயங்கும் பல தமிழ் இணையத்தளங்களும், இவ்வகையான நிதியுதவியிலேயே நடந்து வருகின்றன எனவும் இலங்கை அமைச்சர் ரிசாட் பதியூதீன் கூறியுள்ளார்.

இலங்கை அமைச்சர் ரிசாட் பதியூதீன் கூறியது பற்றி பாமக நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், இலங்கை அமைச்சர் கூறியிருப்பது முட்டாள்தனமான அறிக்கை ஆகும். இதற்கு மேல் நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை என்றார்.

இதுகுறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறனிடம் கேட்டபோது இலங்கை அமைச்சரின் பேச்சுக்கு இந்திய அரசுதான் பதில்சொல்ல வேண்டும் என்றார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News

Your email address will not be published. Required fields are marked *

*