TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உயர்ந்த நிலையில் வாழ்வோரை நோய்கள் தாக்குவது அதிகம்

நல்ல கல்வி அறிவு, அதற்கேற்ப வருமானம் கூடிய தொழில் என்று வளமான வாழ்வு வாழ்வோரைத் தேடியயே நோய்களும் அதிகமாக போய்ச் சேருவதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஒழுங்கற்ற வாழ்வு, ஏழ்மை நிலை கொண்டவர்களுடன் மேற்கண்ட உயர்ந்த வாழ்க்கை வாழ்வோரை ஒப்பிட்டால் உயர்ந்த வாழ்வு வாழ்வோரையே நோய்கள் வேகமாக தாக்குவதாகவும் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட புற்றுநோய்ப் பிரிவு வைத்தியப் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஜொகான்சன் தெரிவித்தார். இதற்கு நல்லதோர் உதாரணமாக சர்க்கரை வியாதியைக் கூறலாம், இந்த வியாதி உயர்ந்த வாழ்வு வாழ்வோரில் பெரும்பாலானவரை தேடிப்பிடித்திருக்கிறது. இதுபோல மார்பகப் புற்றுநோய் உயர்வாழ்வு வாழும் பெண்களை அதிகம் பிடித்துள்ளது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை சென்ற ஆண்டு வெளியான புள்ளிவிபரங்கள் ஒப்பீட்டு ரீதியாக ஏழைகளை விட, உயர்கல்வி, உயர்வாழ்வு கொண்டோர் ஆரோக்கிய வாழ்வு வாழ்வதாக தெரிவித்திருந்தது. இதற்குக் காரணமும் இருந்தது. மனித அறிவால், மருத்துவத்தின் துணையால் பாதுகாக்கக் கூடிய காலரா, கசம், மலேரியா போன்ற தொற்று நோய்களில் இருந்து இவர்கள் அறிவால் தப்பிவிடுகிறார்கள். ஆனால் வம்ச பரம்பரையால் வரும் சர்க்கரை வியாதி, காரணம் அறிய முடியாத புற்றுநோய் போன்றன இவர்களை பீடிப்பதில் இருந்து இவர்களால் தப்ப முடியவில்லை. அதேவேளை இந்த ஆய்வு ஏழ்மையாகவும், ஒழுங்கற்ற நிலையிலும் வாழ்வை வாழ்ந்தால் நோய் பிடிக்காது என்ற கருத்தை உருவாக்குகிறது. வாழும் முறைக்கும் நோய்களுக்கும் சம்மந்தம் கிடையாது, நல்ல நிலையில் வாழ்ந்தால் புற்றுநோயும், சர்க்கரை வியாதியும் வருமென நினைத்து தப்பான பாதையில் வாழ்ந்துவிடக் கூடாது என்று டேனிஸ் சமூகவியல் பணியாளர் அலன் கிறிஸ்ரானிக் கூறினார்.

இது இவ்விதமிருக்க புற்றுநோய் ஏற்பட்டு மார்பகங்கள் அகற்றப்பட்ட பெண்கள் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கோன் தயாரிப்பான செயற்கை மார்பகங்களை பொருத்துவது வழக்கம். இயற்கையான மார்பகங்கள் போலவே இருக்கும் இந்த மலிவு விலை மார்பகங்களால் புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சென்ற மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. இப்போது ஜேர்மனிய சுகாதாரத் துறையினரும் இந்த மார்பகங்கள் குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த மார்பகங்கள் எங்காவது வெடித்தோ, அல்லது அதற்குள் உள்ள திராவகம் ஒழுகும் நிலையோ ஏற்பட்டால் உடனடியாக அதை அகற்றிவிட வேண்டுமென பணித்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Entertainment

Your email address will not be published. Required fields are marked *

*