TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை விஷயத்தில் பான் கீ மூன் தவறிழைத்துவிட்டார்: ஐ.நா நார்வே பிரதிநிதி

moonஇலங்கை விவகாரத்தில் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது கடமையை சரியான முறையில் செய்யவில்லை என ஐ.நாவிற்கான நார்வே பிரதிநிதி முனா ஜூல் தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைப்பின் தலைமைத்துவத்தினை ஏற்றுள்ள பான் கீ மூன் தனது, அதிகாரத்தை தக்க தருணத்தில் சரியான முறையில் பயன்படுத்தவில்லை எனவும், சிறந்த தலைமைத்துவத்திற்கு உரிய பண்புகளும் அவரிடம் இல்லை எனவும், தெரிவித்துள்ள ஜூல் உலக பிரச்சினைகளுக்கு ஐ.நா அமைப்பு காத்திரமான தீர்வு திட்டங்களை இனியாவது முன்வைக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த மே மாத இறுதிப்பகுதியில், வடக்கில் 20,000த்திற்கு மேற்பட்ட, அப்பாவித்தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை தடுத்திருப்பதற்கு, ஐ.நாவினால் முடிந்திருந்த போதும், அதனை ஐ.நா செய்யத்தவறி விட்டதாகவும், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இப்போர்க்குற்றங்களை நிரூபிப்பதற்கும், ஐ.நா அக்கறை எடுக்க தவறிவிட்டதாகவும், மனித உரிமை அமைப்புக்கள், பல குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தகக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*