TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கமல் படத்தில் இருந்து செல்வராகவன் நீக்கம் ஏன்?

‘விஸ்வரூபம் படத்தில் செல்வராகவனை நீக்கிவிட்டு இயக்குனர் பொறுப்பு ஏற்றது ஏன்?’ என்று கமல் தெரிவித்துள்ளார்.

அவர், ‘’விஸ்வரூபம் கதை நான் எழுதியது. செல்வராகவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் எனது கால்ஷீட்டை பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டது. இதனால் படம் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. எனக்கு நேரம் கிடைப்பது அரிது. எனவேதான் இயக்குனர் பொறுப்பை நான் ஏற்றேன்.

விஸ்வரூபம் கதையை வெளியில் சொல்லவில்லை. வழக்கமாகவே என்னுடைய படம் என்றால் ஒரு சிலர் பிரச்சனை தர ஆரம்பித்துவிடுகிறார்கள்.

குறிப்பாக ஆன்மீக சம்பந்தப்பட்ட படமென்றால் அதில் என்ன கூறுகிறேன் என்றுகூட பார்க்காமல், படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர்களாகவே கற்பனையில் ஒரு கதையை முடிவு செய்துகொண்டு எதிர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

விஸ்வரூபம் படத்துக்காக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டன் ஆகிய இடங்களில் செட் போட்டிருக்கிறேன். தமிழ், இந்தி இருமொழியில் இப்படம் உருவாகிறது. முதலில் சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.

கால்ஷீட் பிரச்சனை எழுந்ததால் இருவரும் பேசி விலகிக்கொண்டோம். எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில நடிக்கிறேன். நியூயார்க்கை சேர்ந்த பூஜா குமார் ஹீரோயினாக நடிக்கிறார்’’ என்று கூறியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*