TamilSpy

பொழுது போக்கு இணையம்…

எந்தவொரு அழுத்தங்களுக்கும் அடிபணிந்து ஏதிலிகளை விடுதலை செய்ய முடியாது – கோத்தபாய ராஜபக்ச

gotabhaya-rajapaksaஉள்நாட்டு அல்லது வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஏதிலிகள் முகாமில் உள்ள மக்களை விடுதலை செய்ய முடியாது என சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்து்ள்ளார்.

ஏதிலிகள் முகாமில் உள்ள விடுதலைப் புலிகள் வெளியே வந்து மறைத்து வைத்திருக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தி படையினர் மீது மீண்டுத் தாக்குதலை நடத்திவிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.

ஏதிலிகள் முகாமில் உள்ள 3 இலட்சம் மக்களையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்க தெரிவிக்கும் கருத்தை அவர் மறுத்துள்ளார்.

சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களை ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் நலனுக்கும் பயன்படுத்த முற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு நாம் முடிவு கட்டிவிட்டோம் என்பதை எதிர் அணியினரும், ஊடகத்தைச் சேர்ந்தவர்களும் மறந்துவிட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மே மாதத்திற்குப் பின்னர் எந்தவொரு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெறவில்லை. இதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தி மீண்டும் குண்டுகளை வெடிக்கப்பட்டதும், அரசாங்கத்தைப் பதவி துறக்குமாறு இவர்களே கூறுவார்கள் என அவர் மேலும் அதில் கூறியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*