TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மழை, வெள்ளத்தில் வன்னி முகாம்கள்!

vavuniya_menifame_camp_floodஇலங்கையின் வன்னிப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த அடை மழையால் அங்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மழை நீர் தேங்கியதால் அங்குள்ள மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வன்னியில் ஏற்பட்டுள்ள இந்த அபாயம் குறித்து இலங்கையில் இருந்து வந்த அவசரச் செய்தியை அடுத்து, சென்னையில் உடனடியாக பத்திரிக்கையாளர்களைக் கூட்டிய மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் (பி.யு.சி.எல்.) தமிழகத் தலைவர் முனைவர் சுரேஷ்,

மாணிக்கம் பண்ணையில் அமைந்துள்ள மண்டலம் 2 (இராமநாதன் முகாம்), மண்டலம் 3 (ஆனந்த குமாரசாமி முகாம்), மண்டலம் 4 (பெயரிடப்படாத முகாம்) ஆகிய மூன்று முகாம்களில் மழை நீர் தேங்கியுள்ளது என்றும், சில இடங்களில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்றார்.

இந்த மூன்று மண்டலங்களிலும் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 65,000 + 43,000 + 41,000 = மொத்தம் 1,49,000 தமிழர்கள் கடும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று கூறிய சுரேஷ, மண்டலம் 4,5,6 ஆகியவற்றின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு பொது சமையல் கூடத்தில் உணவு சமைக்கப்பட்டு அளிக்கப்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக குறைவான அளவிற்கு சமைத்து உண்ணுவதற்கான உணவுப் பொருட்களையும், சமைப்பதற்காக விறகுகளையும் இலங்கை அரசு விநியோகித்துள்ளது. இந்த மழையினால் அவர்கள் இருந்த கூடாரங்களில் தண்ணீர் வந்துவிட்டதாலும், வெளியில் எங்கும் நீர்க்காடாக உள்ளதாலும் சமைக்க முடியாமலும், உண்ண உணவின்றியும் மக்கள் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

சிறுவர்களும், வயதானவர்களும், போரில் காயமுற்றவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.

இந்த முகாம்கள் அமைந்துள்ள இடங்கள் வன்னிக்காட்டில் தாழ்வான பகுதிகள் என்பதால் மழைக்காலத்தில் இப்படிப்பட்ட அபாயம் ஏற்படும் என்று அங்கிருந்து ஏற்கனவே தகவல் வந்தது. அந்த நிலையே இப்போது ஏற்பட்டுவிட்டது. அது செம்மண் பூமி என்பதால், அப்பகுதி சேறும் சகதியுமாக ஆகியுள்ளது. இதனால் நிவராணப் பொருட்களை கொண்டு வரத் தயாராகவுள்ள ஐ.நா. மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு அமைப்புகளால் வாகனங்களில் அங்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளதென அந்தத் தகவல்கள் தெரிவிப்பதாக சுரேஷ் கூறினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*