TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை, மியன்மார், பாகிஸ்தானின் கேந்திர பகுதிகளில் சீனா துறைமுகங்களை நிர்மாணித்து வருகிறது – இந்திய கடற்படை பிரதம அதிகாரி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவிப்பு

Mettaஇலங்கை, மியன்மார், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கேந்திர பகுதிகளில் சீனா ஆதாரத் துறைமுகங்களை நிர்மாணித்து வருகிறது என்று இந்திய கடற்படை பிரதம அதிகாரி அட்மிரல் சுரேஷ் மேத்தாவை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்து சமுத்திரப் பிரதேசத்திற்கு இலகுவாகச் சென்று வருவதற்கும் இந்த பிரதேசத்தில் பெருமளவிலானோரை நிலை கொள்ள வைப்பதற்கும் வசதியாக பிரஸ்தாப துறைமுகங்கள் கட்டப்படுவதாக இந்திய தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இன்று, இந்திய கடற்படையைப் பொறுத்தமட்டில் சீன கடற்படை பலவீனமுற்றுள்ளது. சீனாவினால் இந்து சமுத்திரத்தினுள் நுழைய முடியாதிருக்கிறது. இது குறித்து சீனா கவலை கொண்டுள்ளது என்று இந்திய கடற்படை அதிகாரி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

சீனா அதன் இராணுவ பலத்தை கட்டியெழுப்பி வருவது குறித்து அவரிடம் கேட்ட போது, எண்ணிக்கைகளை பொறுத்தவரையில் சீனாவுடன் போட்டி போட இந்தியா விரும்பவில்லை என்று மேஹ்தா கூறினார். எவ்வாறாயினும், அதிக சக்தி வாய்ந்ததும் நவீன மயமானதுமான ஆயுதங்களை வைத்திருப்பதில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, அம்பாந்தோட்டை எண்ணெய் குதம், கட்டுநாயக்க நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு சீன எக்ஸிம் வங்கி சிறிலங்கா அரசுக்கு நிதியளிப்பதற்கு கைச்சாத்தி்ட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள் மற்றும் எண்ணெய் குதவசதிகளை அமைத்தல் என்பவை தொடர்பாக சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் 350 மில்லியன் டொலர் பெறுமதியான இரு உடன்படிக்கைகளில் சிறிலங்கா கடந்த வாரம் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த இரு உடன்படிக்கைகளும் அதிகளவு தேவைப்படும் உள்சார்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் நாட்டின் எதிர்கால சமூக, பொருளாதார அபிவிருத்திக்கும் பங்களிப்பினை வழங்கும் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்திருக்கிறது.

எண்ணெய் குதங்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளன. சீன நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முதற்கட்டப் பணிகளுக்கு 360 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஏற்கெனவே எக்ஸிம் வங்கி உறுதியளித்திருக்கிறது.

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய நெடுஞ்சாலையை அமைப்பதற்கு நிதி வழங்குவது இரண்டாவது உடன்படிக்கையாகும். 30 கி.மீ. தூரத்தில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News

Your email address will not be published. Required fields are marked *

*