TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கொலைவெறியன் கைது: தனுஷ் என்று எண்ணவேண்டாம்!

கொலைவெறியன் கைது என்றதும் ஏதோ கொலைவெறிப் பாடலைப் படிய தனுஷ் என்று நினைக்கவேண்டாம். இது உண்மையான கொலைவெறியன் தான். கடந்த 24.11.2011 அன்று பாட்டாளிபுரம் கலவன் தமிழ் வித்தியாலயத்திற்கு சென்று கொண்டிருந்த குறுகுலசிங்கம் சிறிவதனி(வயது- 33) என்ற இளம் ஆசிரியையை கோடரியால் அடித்துக்கொன்று விட்டு தங்க ஆபரணங்களை யாரோ திருடிச் சென்றுள்ளனர் என்ற செய்தியை நீங்கள் ஏற்கனவே அதிர்வில் படித்திருப்பீர்கள். இக் கொலையில் தொடர்புடையவர் என்று கருதப்பட்ட இந் நபர் கொலைநடந்த நாள் முதலாக காட்டில் மறைந்து வாழ்ந்துவந்துள்ளார். நேற்றைய தினம்(புதன்கிழமை) தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் இவர் வசமாக மாட்டியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பாலசிங்கம் நகுலேஸ்வரன்(வயது- 38) சந்தோசபுரம், சம்பூர் பகுதியைச்சேர்ந்தவர் என அறியப்படுகிறது. காட்டுப் பகுதியில் மறைந்திருந்த இவர், விறகு வெட்டச் செல்வும் மக்களைப் பயமுறுத்தி அவர்களிடம் உணவுகளை வேண்டிய சாப்பிட்டு வந்துள்ளார். விறகு வெட்டச் செல்பவர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர். இதனை அடுத்துப் பொலிசார் மாறுவேடமிட்டு தாமும் விறகுவெட்டுபவர்கள் போல காட்டிற்குள் சென்றுள்ளனர். மாறுவேடத்தில் வந்த பொலிசாரை அடையாளம் காணாத குறிப்பிட்ட நபர் அவர்களையும் மிரட்டி சாப்பாட்டை பறிக்க முயற்சிசெய்துள்ளார். பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவர் காயமடைந்து தற்போது கைதாகியுள்ளார்.

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பாலசிங்கம் நகுலேஸ்வரன் தற்போது திருகோணமலை அரசினர் பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News

Your email address will not be published. Required fields are marked *

*