TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கமலுக்கு ரஜினி விடுத்த அழைப்பு!

ரஜினியும் கமலும் சேர்ந்திருக்கும் காட்சியை பார்க்க ரசிகர்கள் தவறமாட்டார்கள். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்ததாக தெரிகிறது. கமல் இயக்கி நடித்துக் கொண்டிருக்கும் படம் “விஸ்வரூபம்”. இந்த படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.

அவற்றை கமலிடம் காட்ட அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது வைரமுத்துவிற்கு ரஜினியிடமிருந்து ஃபோன் வந்துள்ளது. வைரமுத்து கமல் வீட்டில் இருப்பதை அறிந்த ரஜினி டெலிஃபோனை கமலிடம் கொடுக்கச் சொல்லி சிறிது நேரம் பேசியபின், ”நான் நடித்துக் கொண்டிருக்கும் படமான “கோச்சடையான்” பட செட்டிற்கு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைரமுத்து மற்றும் கமலின் சந்திப்பின் போது வைரமுத்துவின் பாடல் வரிகளில் நெகிழ்ந்த கமல் வைரமுத்துவிற்கு மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் உபயோகப்படுத்தும் இத்தாலியிலுள்ள மலையின் பாறைக் குழம்பிலிருந்து தயாரித்த பேனா ஒன்றை பரிசளித்ததாக கூறப்படுகிறது. கோச்சடையான் படப்பிடிப்பில அனேகமாக கமலின் வரவை எதிர்பார்க்கலாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema

Your email address will not be published. Required fields are marked *

*