TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அஜீத்தின் “பில்லா 2” ரிலீசுக்கு தயார்

அஜீத் நடித்த பில்லா படம் கடந்த 2007-ல் ரிலீசானது. இதில் நயன்தாரா, நமீதா ஜோடியாக நடித்தனர். விஷ்ணுவர்த்தன் இயக்கினார். இப்படம் ரஜினி நடிப்பில் வந்த பழைய பில்லா படத்தின் ரீமேக் ஆகும். இதன் இரண்டாம் பாகத்தை “பில்லா 2” என்ற பெயரில் படமாக்க அஜீத் விரும்பினார். அதன்படி இயக்குனர் சக்ரிடோலட்டி இதற்கான கதையை உருவாக்கினார்.

இவர் கமலஹாசன் நடித்த ‘ உன்னைப்போல் ஒருவன்’ என்ற படத்தை டைரக்டு செய்தவர். தூத்துக்குடி கடற்கரையோரம் பிறந்து வளர்ந்து ஒருவன் சர்வதேச கடத்தல் தாதா ஆவதுபோல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறு விறுப்பாக நடந்தது.

கடைசி கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 93 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்து பாடல் மற்றும் டிரெய்லர்கள் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. ஓரிரு மாதங்களில் படம் ரிலீசாக உள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Cinema
  • firdawsiya says:

    good film 2 billa

    December 23, 2011 at 09:23

Your email address will not be published. Required fields are marked *

*