TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பாதி எரிந்த சோனியா உருவப்படத்தின் மேல் பிரபாகரன் படம்:கடலூர் பதட்டம்

Prabhakaranகடலூர் மாவட்ட, காங்கிரஸ் அலுவலகத்தில் சோனியா உருவப்படம் எரிக்கப்பட்ட சம்பவத்தால், பதட்டம் ஏற்பட்டது.

கடலூர் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் உள்ளது. சுதந்தின விழா கொண்டாடுவதற்காக, 14ம்தேதி கொடி மேடை வெள்ளையடித்து காங்., கொடி தோரணம் கட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

பின்னர் அலுவலக நிர்வாகி பக்தவச்சலம் இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். காலை 7 மணிக்கு பக்தவச்சலம் காங்., அலுவலகத்தை திறந்த போது தோரணங்களில் இருந்த காங்., கொடி எரிக்கப்பட்டிருந்தது.

கொடி மேடை அருகே, சோனியாவின் உருவப்படம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதன் மீது விடுதலைப்புலிகளின் கொடி மற்றும் பிரபாகரன் படம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் நெடுஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

சுதந்திர தின விழா நடைபெறுவதால், தாமதமாக போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் காலை 11 மணிக்கு மாவட்ட காங்., அலுவலகத்தில் கொடி எரிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விசாரித்தனர். இச்சம்பவம் அதிகாலை 5 மணி அளவில் நடந்திருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: India News

Your email address will not be published. Required fields are marked *

*