TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடுப்பு முகாம்களில் தமிழ்ப்பெண்கள் படும் அவலம்

VavuniyaCampவன்னியில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், கொடூரங்களை முன்னாள் சட்ட மா அதிபர் சித்தா றஞ்சன் டி சில்வா ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி,இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மதுரையில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாமுக்கு நேற்று வியாழக்கிழமை சென்று அங்குள்வர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் நிமல்கா பெர்னாண்டோ, இவ்விசயங்களை தெரிவித்துள்ளார்.

’’முகாம்களில் உள்ள மக்களுக்கு பற்பசைகளும் சோப்பும் கூட ஆடம்பரப் பொருட்கள். முகாம்களுக்கு வரும்போது அவர்கள் எந்த உடையை உடுத்தியிருந்தார்களோ அதனையோ அவர்கள் தொடர்ந்தும் அணிந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழர்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடத்தப்படவில்லை. பதிலாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் போன்றே அதிகாரிகளால் நடத்தப்படுகிறார்கள்.

சாதாரண பொதுமக்களே இத்தனை அவலங்களைச் சந்திக்கும்போது விடுதலைப் புலி உறுப்பினர்கள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர்களில் ஊனமுற்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிறப்பு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

போரின் போதுதான் குண்டுத் தாக்குதல்கள் நடத்தி அழித்த பகுதிகள் அனைத்தையும் தெளிவாக அடையாளங்கள் இன்றி அரசு துடைத்தழித்து விட்டது. அங்கு இருந்த உடல்கள் அனைத்தையும் கடலில் வீசி போர்க் குற்றங்களுக்கான தடயங்களையும் மறைத்துவிட்டார்கள்’’என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், ‘’முகாம்களில் உள்ள இளம் பெண்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு தற்காலிகக் கூடாரங்களில் சிங்களப் படையினருடன் தங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*