TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழ் மக்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டதற்காக கனடா கவலைப்படும் – சிறிலங்கா எச்சரிக்கை

SriLanka-Flagஇலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதற்காக கனடா கவலைப்படும் என்று அங்குள்ள சிறிலங்கா நாட்டின் உயர்ஸ்தானிகர் தயா பெரேரா எச்சரித்துள்ளார்.

ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தள சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே தயா பெரேரா இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து 2006 இற்கு முன் அகதிகளாக சென்றோரை கனடா உள்ளீர்த்தமை அந்த நாட்டின் எதிர்கால பொதுத் தேர்தலில் முக்கியமான காரணியாக தோற்றம் பெறும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பேணிக்காப்பவர்கள் என்ற பெருமையை கனடா எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் அகதிகளாக வருவோரில் பெருந்தொகையானோருக்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது. கனடா புலிகளை ஊக்குவிக்கவோ அல்லது தாபரிக்கவோ இல்லை. 2006 இல் புலிகளை தடை செய்திருந்தது. 2008 ஜூனில் உலகத் தமிழர் இயக்கத்தை தடை செய்திருந்தது என்றும் தயா பெரேரா கூறியுள்ளார்.

இதேவேளை, கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைது தொடர்பாக கனடாவில் பகிரங்கமான எதிரொலி காணப்படவில்லை என்று அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.

மோதலின் இறுதிக்கட்டங்களில் பொது மக்களை மனிதக் கேடயங்களாக பிரபாகரன் பயன்படுத்தியது குறித்து புலம்பெயர் சமூகத்தின் மத்தியிலிருந்து கண்டனம் தெரிவித்து ஒரு வார்த்தைதானும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்றும், ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் நடத்தப்படும் விதம் குறித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதாகவும் ஏனென்றால் தொடர்ந்து பணம் திரட்ட ஆர்ப்பாட்டங்களுக்கான சில அடிப்படைத் தேவை அவர்களுக்கு உள்ளதாகவும் தயா பெரேரா மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*