TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழர்களின் துயரம் நீக்கப்படும்வரை இலங்கைக்கு செல்லப்போவதில்லை: இந்திய விஞ்ஞானி சுவாமிநாதன்

swaminathanஇலங்கையில் தமிழ் மக்களின் துயரங்களுக்கு அரசியல் தீர்வு காணப்படும் வரை அந்த நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளப்போவதில்லை என இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என வர்ணிக்கப்படும் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கில் விவசாயத்திற்கு புத்துயிர் கொடுக்க உறுதியளித்துள்ள இந்தியா, இது குறித்து ஆராய்வதற்காக விரைவில் விவசாய விஞ்ஞானிகளை கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக புதுடில்லித் தகவல் தெரிவிக்கின்ற சூழ்நிலையில் சுவாமிநாதனின் இக் கருத்து வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு சென்ற மேற்கொண்டிருந்த சுவாமிநாதன், வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவசாயத்திற்கு புத்துயிர் கொடுக்கத் தயார் எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், தற்போது தான் இலங்கைக்கு செல்லப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏதோ ஒரு வகையில் அரசியல் தீர்வு எட்டப்படும் வரை அங்கு உடனடியாகச் செல்வதற்கு நான் எண்ணவில்லை என அவர் இந்தோ ஆசிய செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் இலங்கையில் கௌரவமாக வாழாதவரை ஏனைய விஷயங்கள் முக்கியமற்றவை என சிலர் கருதுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள சுவாமிநாதன் தற்போதைக்கு இலங்கைக்குச் செல்லும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த பெரும் எண்ணிக்கையானோர் உள்ளனர். அங்கு நிலைமை சுமுகமானதும் இலங்கைக்குச் செல்வது குறித்து சிந்திப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் வடபகுதியில் விவசாய அபிவிருத்திக்கான சாத்தியப்பாடுகள் குறித்து தனது எண்ணங்களை இந்திய வெளிவவகார அமைச்சிற்கு சமர்பித்துள்ளார் எனவும் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனது திட்டம் தயாராகவுள்ளது, இந்திய அதிகாரிகள் அவசியமான விஷயங்களைச் செய்யலாம், எனது யோசனைகளையும் அமுல்படுத்தலாம். நான் அங்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*