TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இடம்பெயர்ந்தவர் நலன் பற்றி கூறும் அருகதை றொபேட் ஒ பிளேக்கிற்கு இல்லை – கெஹெலிய

Robert_O_Blake_Rambuwelaவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நிலையில் சிறீலங்கா அரசினால் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் நலன்கள் பற்றி கருத்துக்உகூறும் அருகதை தென்னாசிய மற்றும் மத்திய ஆசியாவிற்காக அமெரிக்காவின் உதவிச் செயலர் றொபேட் ஒ பிளேக்கிற்கு இல்லை என சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் நிலை பற்றி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள ஓ பிளேக், வரும் ஆண்டு நடைபெறவுள்ள சிறீலங்காவின் அதிபர் தேர்தல்வரைக்கும் சிறீலங்கா அரசியல் தீர்வு திட்டம் ஒன்றை முன்வைக்காது விடின், அது தமிழ் மக்களை தாமும் இவ் தீவின் அரசியல் நடவடிக்கைகளில் உரித்து உடையவர்கள் அல்ல என்றும் சிந்தனைக்கு இட்டுச் செல்லும் எனக் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள சிறீலற்காவின் அமைச்சர் கெஹெலிய, பிளேக் இவ்வாறான கருத்து சொல்ல தகுதி அற்றவர் என்றும், சிறீலங்கா மக்கள் தாம் மகிழ்ச்சியாக வாழ என்ன செய்ய வேண்டும் என தெரிந்து வைத்துள்ளதாகவும், தற்பொது முகாமில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அசோசியேற் ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள ஓ பிளெக், சிறீலங்கா அரசு 10,000 மக்களை முகாமை விட்டு வெளியேற அனுமதி அளித்துள்ளது எனவும், இன்றும் சிலரை வெளியேற இவ்மாத இறுதியில் அனுமதிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வருட இறுதியில் இன்னும் சிலரை வெளியுற அனுமதிக்க உள்ளதாக சிறீலங்கா அரசு கூறியுள்ள போரிலும், அவர்கள் மீண்டும் தடுத்து வைக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ள ஓ பிளேக், தற்பொது முகாமில் உள்ள மக்களுக்கு முக்கியமானது அவர்கள் நடமாடும் சுதந்திரத்தை வழங்குவதாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*