TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கையில் ஒரு கிலோ மீட்டர் நிலப்பரப்புக்குள் ஒன்றரை லட்சம் மக்கள் தடுத்துவைப்பு

vavuniyaஇலங்கையின் பகுதியில் மிக மோசமான நிலையில் உள்ள முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் சிறுவர்கள் உள்ளிட்ட 2 லட்சத்து 85 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களையும் உடனடியாக விடுக்குமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களின் போது, இந்த முகாம்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு முகாமும் முட்கம்பிகளால் சுற்றி அடைக்கப்பட் பாதுகாப்பு படையினரால் காவல் காக்கப்படுகின்றன.

முகாம்களின் நிலை குறித்து கருத்துத் தெரிவித்த அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிரித்தானிய பணிப்பாளர் கேற் அலன், ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான நிலப்பரப்பில் ஒன்றரை லட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.

அங்குள்ள மிகப்பெரிய முகாம் மெனிக் பாம் மிகக் கொடுமையானது, சொல்லும் தரமற்றது. ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான நிலப்பரப்பில் அமைந்துள்ள அந்த முகாம் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பொதுமக்களை கொண்டுள்ளது.

பிரித்தானியாவின் வெம்பிளி விளையாட்டரங்கை ஒத்ததான நிலப்பரப்புக்குள்ளேயே இந்த மக்கள் உண்டு, உறங்கி வாழ்கிறார்கள்.

முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் என்பதைத் தவிர இத்தகைய மோசமான சூழ்நிலைக்குள் அவர்கள் அடைத்து வைக்கப்படுவதற்கு வேறு காரணங்கள் ஏதும் இல்லை. மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் சாதாரண பொதுமக்கள் என்று நாம் கூறுகின்றபோதும் அனைத்துத் தரப்பினரும் இந்த கொடுமையான நிலைமைக்குள் சிக்கிகொண்டுள்ளனர்.

அங்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. குறைந்தளவு கழிவு அற்றல் வசதியே உள்ளது. அத்துடன், அங்குள்ள மக்கள் வெளி உலகுடன் தொடர்புகொள்வதும் தடுக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் பணியாற்றும் தொண்டர்கள்கூட தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களுடன் உரையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் அப்பாவிகள். ஆனால் கொடுமையான மனிதத்தன்மையற்ற வழிகளில் நடத்தப்படுகிறார்கள் என்று கேற் அலன் மேலும் தெரிவித்தார்.

அதேசமயம், மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் கட்டுப்பாடுகளைத் தளத்துவதன் மூலம் அவர்கள் உடனடியாக விடுவிக்குமாறும், உடனடியான, முழுமையான, தடைப்படாத மனிதாபிமான உதவிகளை அரசு வழங்குவதுடன் உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் அனைத்து முகாம்களையும் முற்றிலுமாக மூடிவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*