TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகிய கிழக்கு மாகாணம் வாழைச்சேனையைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கதை (காணொளி)

Aljபோரின் இறுதி நாட்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பிரதேசத்தில் இருந்தோம். எல்லாத் திசைகளிலிருந்தும் ஷெல் வீச்சுக்களும் குண்டு வீச்சுக்களும் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. பங்கர்களைவிட்டு வெளியே வர முடியவில்லை. இறுதியில் புலிகள் அரசாங்கப் பகுதியை நோக்கிப் போக அனுமதித்திருந்தார்கள். நந்திக்களப்பூடாக நாங்கள் வெளியேறும் போதும் எங்களை நோக்கி செல்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன.

தண்ணீருக்குள் விழுவதும் எழுந்து ஓடுவதுமாக இருந்தோம். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே எங்களின் ஒரே நோக்கமாக இருந்தது. இடையில் எனது கையில் ஏதோ கடித்தது போலிருந்தது. பின்னர் தான் அது ஷெல் தாக்குதலால் ஏற்பட்ட காயம் என்றுணர்ந்தேன். இறுதியில் அரச கட்டு;பாட்டுப் பகுதிக்கு வந்த போது எனது கணவரை நான் தவற விட்டு விட்டேன் என்கிறார் இந்தப் பெண்மணி.

தனது கணவர் வருவார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாக அழுகையூடே அவர் தெரிவிக்கிறார். அவரை யாராவது எங்காவது கண்டால் தனக்கு அறிவிக்கும்படியும் அவர் கோருகிறார்.

முகாம்களில் உள்ளவர்களும் இவ்வாறு தமது அன்புக்குரிய உறவுகளை இழந்து போயிருக்கிறார்கள். அவர்களை முகாமுக்குள் வைத்திருக்காமல் தத்தமது சொந்த ஊருக்கு அவர்களது இருப்பிடங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் பெண்ணின் கதையைப் போன்ற கதைகள் திரும்பத் திரும்ப ஆயிரம் முறை அல்லது பத்தாயிரம் முறை அல்லது 245 ஆயிரம் முறை சொல்லப்படும். அவ்வளவு மக்கள் வடக்கின் இந்த முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். உள்ளுராட்சித் தேர்தல்களோ தேர்தல் வாக்குறுதிகளோ இந்த மக்களின் காயங்களை ஆற்றப் போவதில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Tamileelam News

Your email address will not be published. Required fields are marked *

*