TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசாங்கம் அனைத்து வழிகளிலும் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது- சிறீகாந்தா

srikantha_tna_mpவடக்கு மாநகரசபைத் தேர்தலின் போது அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதுகுறித்து யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா தெரிவிக்கையில்:

அரசாங்கம் மாநகரசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அனைத்து வழிகளிலும் அரசாங்கத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது.

ஒருபுறம் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி வாக்காளர்களைக் கவரும் நவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. மறுபுறம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் சில கட்சிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.

அரசாங்கம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகப் பரப்புரை செய்து வருகின்றது. அவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்பது எமக்குத் தெரியும்.

3 இலட்சம் மக்களையும் விடுதலை செய்துவிட்டு பொதுச் தேர்தல் அல்லது அரச அதிபர் தேர்தல் ஒன்றை நடாத்திப் பார்க்கட்டு என நான் சவால் விடுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*