TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஊழல் மோசடிகள், அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டே தேர்தல்களில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது: ஐ.தே.க

unpயாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் தமிழ் மக்களின் ஆதரவை ஐ.தே.க. இழந்துள்ளதென்ற கருத்தை ஏற்றுக் கொள்ளடியாது. அங்கு நூற்றுக்கு 80 சதவீதமான மக்கள் வாக்களிக்கவில்லை. தேசிய மட்டத்திலான தேர்தலொன்று நடத்தப்படும் போது தமிழ் மக்கள் சயான தீர்ப்பை வழங்குவார்கள் என்று அக்கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. தெவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

ஊவா மாகாண சபைத் தேர்தலின் போதும் நிறைவேற்று அதிகாரத்தின் தானசாலைகள் நடத்தப்பட்டன. காணி உறுதிகள் வழங்கப்பட்டன. தொழில் வாய்ப்புக்களை வழங்குவதாக கூறி விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்பட்டன.

அரச வளங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டது. ஊழல் மோசடிகள் என பல்வேறு விதத்திலான அடக்குமுறைகள் முன்னெடுக்கப்பட்டே தேர்தல்களில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நூற்றுக்கு 80 சதவீதமான மக்கள் வாக்களிக்கவில்லை. எனவே தமிழ் மக்களின் ஆதரவை அரசாங்கம் பெற்றுள்ளது என கூறடியாது. அது மட்டுமல்லாது தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பதாக யாழ்ப்பாணத்தில் 3000 வாக்குச் சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலும், புத்தளத்திலும் வாக்களிப்பு நிலையங்களுக்கு அமைச்சர்கள் சென்றுள்ளனர். புத்தளத்தில் வாக்களிக்க வந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளோம்.

நாம் தமிழர் கூட்டமைப்புடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். தேசிய மட்டத்திலான தேர்தலொன்று நடத்தப்படும் போது தமிழ் மக்கள் சயான தீர்வை வெளியிடுவார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*