TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடை முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் மக்களை விடுவிப்பதில் அமெரிக்கா ஆர்வம்

usaசிறிலங்கா இராணுவத் தடை முகாம்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதற்க எதிராக அமெரிக்கா கருத்து வெளியிட்டுள்ளது. முகாம்களில் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை முடிவுக்கு கொண்டு வருமாறும் மீள்குடியேற்றத்தை துரிதமாக முன்னெடுக்குமாறும் அமெரிக்கா சிறிலங்காவை வலியுறுத்தியுள்ளது.

கடந்தமாத பிற்பகுதியில் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டிருந்த அமெரிக்க சனத்தொகை, அகதிகள், புலம்பெயர்வு விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் எரிக் ஸ்வாட்ஸ், இடம் பெயர்ந்த மக்களும் அகதிகளும் மோதலுக்குப் பின்னர் எப்போது தாங்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச்செல்வது என்பது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கான தமது சொந்த தலைவிதியை வழமையாக தீர்மானிக்க வேண்டியவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அகதி முகாம்களுக்கு உதவி வழங்கிவரும் அமெரிக்கா, இடம் பெயர்ந்த தமிழர்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு அதிகளவு உதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அதேசமயம், முகாம் அகதிகள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வைக்கப்பட்டிருப்பது குறித்து கவலையடைந்திருப்பதாக உதவி அமைச்சர் ஸ்வாட்ஸ் கூறியுள்ளார்.

எங்கும் இருப்பது உண்மை, இலங்கையிலும் அகதிகள் இருப்பது உண்மையாகும். ஆனால் இங்கு மக்கள் முகாங்களுக்குள் முடக்கிவைக்கப்பட்டுள்ளனர் என்று ரொய்ட்டர் செய்திச் சேவைக்கு எரிக் ஸ்வாட்ஸ் கூறியுள்ளார். மக்களை அவர்களின் விருப்பத்திற்குமாறாக வைத்திருக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் நியாயபூர்வமன பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தீர்வுகாண சிறப்பான வழிமுறையை கொழும்பு கண்டுபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க உதவி அமைச்சர் எரிச் ஸ்வாட்ஸ் கூறுகிறார். அந்தக்கவலைகளை சமாளிக்க கையாளும் வழிமுறைகளுக்காக முழுச் சனத்தையும் முகாம்களுக்குள் முடக்கிவைக்க தேவையில்லை என்று அமெரிக்க உதவி அமைச்சர் கூறுகிறார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*