TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாழ் தேர்தலில் ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள் காயம்

tn_EPDPஇன்று நடைபெற்ற யாழ் மாநகரசபைத் தேர்தலின்போது, நாயன்மார்க்கட்டுவில் உள்ள பாடசாலையிலமைந்திருந்த வாக்குச் சாவடியொன்றுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஈ.பி.டி.பி ஆதரவாளர்களை, போலீசார் தடுத்து நிறுத்த மேற்கொண்ட பிரயத்தனத்தின்போது அவர்களில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசாரை ஆதாரம் காட்டி தமிழர் தேசியக் கூட்டணியினர் கூறியுள்ளனர்.

வாக்களிப்பு நேரம் முடிவடைவதற்குச் சில நிமிடங்கள் முன்னதாக, நாவாந்துறை, குருநகர் பகுதிகள் உள்ளடங்கலாக சில இடங்களில், தமது ராணுவ அடையாள அட்டையினைக் காண்பித்து வாக்களிப்பதற்காக பலர் வந்துள்ளனர். இவர்களை அனுமதிக்காத போலீசாருக்கும் இவர்களுக்க்கும் மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனினும், போலீசார் நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அவ்விடங்களில் பதற்றம் நிலவியது.

கிட்டத்தட்ட 17.5 இலிருந்து 18 வீதமான வாக்குகள் கடைசி நேரத்திலேயே போடப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*