TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இராணுவ முற்றுகைக்குள் 3 இலட்சம் மக்கள் – சிக்காகோவிலிருந்து வாஷிங்டன் வரை 1000 மைல் நடக்கும் இளைஞர்கள்!

BreaktheSilence01மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பது உட்பட இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்கப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மூன்று தமிழ் இளைஞர்கள் 1000 மைல் தூர நடைப்பயணத்தை சிக்காகோவிலிருந்து வாஷிங்டன் டி.சி.வரை மேற்கொண்டுள்ளனர்.

இப்போது இவர்கள் அரைவாசித்தூரத்தை அவர்கள் தாண்டியுள்ளனர். கடந்த திங்கட்கிழமை அவர்கள் டேற்றனை வந்தடைந்ததாக டேற்றன் தொலைக்காட்சி நிலையம் தெரிவித்தது. கண்ணன் ஸ்ரீகாந்தா, விஜே சிவனேஸ்வரன், ரமணன் திருக்கேதீஸ்வரநாதன் ஆகிய இளைஞர்களே நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் கனடிய கல்லூரி மாணவர்களாவர். செப்டெம்பரில் வாஷிங்டனை சென்றடைவார்களென அவர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிகாரிகளை வலியுறுத்தவுமே இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அத்துடன், அரை நூற்றாண்டு கால இனநெருக்கடிக்குத் இறுதித் தீர்வு காணும் முயற்சியை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை தாங்கள் வலியுறுத்தவுள்ளதாக கண்ணன் ஸ்ரீகாந்தா கூறியுள்ளார்.

வாஷிங்டனில் தாங்கள் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் குறித்து விபரித்த அவர்கள் அங்கு கூட்டங்களை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் காங்கிரஸாரை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் இளைஞர்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் உறுதியான திட்டம் உள்ளது. அந்த நடவடிக்கையை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்துவோம் என்று ஸ்ரீகாந்தா கூறியதாக இணையத்தள செய்திகள் தெரிவித்தன.

BreaktheSilence

ChicagoWash

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: World News

Your email address will not be published. Required fields are marked *

*