TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறீலங்காவின் மிதிவெடி அகற்றலுக்கு பிரித்தானியா நிதி உதவி

uk_flag_outசிறீலங்கா அரசின் போர் நடவடிக்கையின்போது புதைக்கப்பட்ட மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைக்கு பிரித்தானிய அரசு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளது.

கண்ணிவெடி அகற்றும் அலோசனைக் குழு ஒன்றின் ஊடாக ஐந்து இலட்சம் பவுண்ஸ்களை வழங்கி சிறீலங்கா அரசின் போர் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த நிலையில் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள மக்கள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் இவ் உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ள இவ் உதவி கண்ணிவெடிகள் காணப்படும் இடங்களை அடையாளம் காணவும், அளவீடுகளை மேற்கொள்ளவும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசு தமிழ் மக்களை சிறையிலடைத்து வைத்துக் கொண்டு தமிழர் தாயகத்தில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகள் கண்ணிவெடிகளை அகற்ற நாளெடுக்கும் என்றும், இதனால் மீள் குடியேற்றம் தாமதமாகும் என்றும் தெரிவித்து வருகின்றது.

அத்துடன், இதற்கு முன்னர் இந்திய அரசு தமிழர் தாயகத்தில் மிதிவெடிகளை அகற்ற மனிதவலு மற்றும் வேறு உதவிகளை வழங்கியுள்ளதுடன், நேரடியான பங்களிப்பையும் ஆற்றி வருகின்றது. யப்பான் அரசும் நிதி உதவி அளித்துள்ளது.

ஆனால், சிறீலங்கா அரசு போர் முடிவுற்றதாக அறிவித்து 3 மாதங்கள் ஆகியும் வன்னிப் பகுதிக்குள் மிதிவெடி அகற்றும் பணிகள் முழு வேகத்துடன் ஆரம்ப்பிக்கப்பட்வில்லை என்பதுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அப்பணியை செய்ய இன்றும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*