TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சிறீலங்கா அரசிற்கு எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டனம்

Media_stopwaronjournalists_ifjசிறீலங்காஅரசு ஊடகங்கள் மீது மேற்கொண்டுவரும் அடக்குமுறைகள் தொடருவதாக, பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

வவுனியா நகராட்சிமன்றம், மற்றும் யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தல்களின்போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என, சிறீலங்கா அரசு விடுத்துள்ள அறிவித்தல் தொடர்பாகவே இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தடை பற்றி கடந்த 3ஆம் நாள் சிறீலங்கா தேசியப் பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் குலுகல்ல அறிவித்திருந்தார்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தடை விதிக்கப்படுவதாக சிறீலங்கா அரசு விடுத்துள்ள அறிவித்தலை ஏற்க முடியாது எனவும், இது மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் எனவும், இதன் மூலம் நீதியான தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை எனவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது.

சிறீலங்கா அரசு தொடர்ந்து ஊடக சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி வருவதாகக் கண்டனம் தெரிவிக்கும் பிரான்சை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஊடகவியலாளர்கள் தாக்கப்படுதல், உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதான தடைகள், கொலை அச்சுறுத்தல், காணாமல் போதல் என்பன தொடருவதாகவும் சுடடிக்காட்டியுள்ளது.

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஒரு சில விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவை முறையாக முடிவுபெறவில்லை எனவும், இவ்வாறான பின்புலத்தில் ஊடகவியலாளர்கள் இலங்கையில் பணியாற்ற முடியாது எனவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News

Your email address will not be published. Required fields are marked *

*