TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கோத்தபாய ராஜபக்சே நடவடிக்கை:ஆபத்தில் ஐந்து பத்திரிக்கையாளர்கள்

gotaஇலங்கை தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டார்கள் என்ற குற்றம்சாட்டி ஐந்து பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படு வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்சேதான் இந்த ஐந்து பேருக்கும் பாதுகாப்பு வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

’சியாத்த’ ஏட்டைச் சேர்ந்த பிரசன்ன பொன்சேகா, ‘ரிவிர’ ஏட்டைச் சேர்ந்த திஸ்ஸ ரவீந்திர,’பொட்டம் லைன்’ ஏட்டைச் சேர்ந்த ருவான் வீரகோன்,ரூபவாஹினி’ தொலைக்காட்சி சேவையைச் சேர்ந்த அமல் சமந்த,’லக்பிம’ ஏட்டைச் சேர்ந்த மிகிரி பொன்சேகா

ஆகிய ஐவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களுக்கு ஆயுதம் ஏந்திய படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

போர் நடைபெற்ற காலத்தில் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக இவர்கள் ஐவரும் செயற்பட்டார்கள் என்றுதான் இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இதனால் இந்த ஐவர் உயிருக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*