TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை-சீன கூட்டுறவு:அமெரிக்க தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

usaஇலங்கையின் தமிழ் இன அழிப்புக்கு சீன மக்கள் குடியரசு வழங்கி வருகின்ற ஆயுதம், நிதி மற்றும் இராஜதந்திர உதவிகளை கண்டித்து அமெரிக்க, கனடா தமிழர்களினால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சீனாவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான உயர் ஆணையக அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இலங்கை – சீன கூட்டுறவு தமிழர் பாராம்பரிய பிரதேசங்களில் தமிழர் விகிதாசாரம் குறைவடையச் செய்யும் விதத்தில் குடியேற்றத் திட்டங்கள் அமைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதனைக் கண்டித்தும் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் பலகைகளை தாங்கியிருந்தனர்.

தமிழ் இன அழிப்பில் இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்காத சீனா போன்ற பேரரசும் பின் நிற்பது,

நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளின் எனைய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் தெரியாமல் உள்ள நிலையே காணப்படுகின்றது எனவும்,

இந்நிலை இவ்வாறான சீன-சிறிலங்கா கூட்டு உறவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கவனயீர்ப்புக்கள் மூலம் மாற்றப் படவேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: News, World News

Your email address will not be published. Required fields are marked *

*