TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தடை முகாம்களில் உள்ள சிறுவர்களை பெற்றோர்களிடம் இருந்து பிரித்து புதிய முகாமில் அடைக்க சிறிலங்கா முடிவு

Vavuniyaவவுனியா இராணுவத் தடை முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சிறுவர்களைத் தனியாகப் பிரித்து புதிய தடை முகாம்களில் அடைப்பதற்கு சிறிலங்கா தீர்மானித்துள்ளது.

180 நாட்களில் மக்களை மீளக் குடியமர்த்தப்போவதாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சிறிலங்கா, தற்போது சிறுவர்களை தனியாக அடைத்து வைப்பதற்கென புதிய தடை முகம்களை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தனியான புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிறிலங்காவின் நீதியமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

13 வயது முதல் 18 வயது வரையான சிறுவர்கள் தங்க வைப்பதற்கான புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்தத் தடைமுகாம் வவுனியா விவசாயக் கல்லூரியில் அமைக்கப்படவிருப்பதனை சிறிலங்கா நீதியமைச்சின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். முதற் கட்டமாக 400 சிறுவர்கள் இப்புதிய தடை முகாமிற்கு கொண்டு செல்லப்படவுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

வவுனியா வைத்தியசாலையின் கண்காணிப்பின் கீழ் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் கல்வி அதிகாரிகளின் உதவியுடனும் யுனிசெப் அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த சிறுவர்களை கண்காணிப்பதற்கான செயற்குழு நியமிக்கப்படுமெனவும் நீதியமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*