TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி வேட்பாளர்மீது தாக்குதல்; த.தே.கூ ஆதரவாளர்கள் தடுத்துவைப்பு

tn_jaffna-mapசனிக்கிழமை இரவு இனந்தெரியாத குழுவொன்றினால் ஈ.பி.டி.பி யின் யாழ் மாநகரசபைத் தேர்தல் வேட்பாளர் அப்புத்துரை மானுவேல் மங்களனேசன் தாக்கப்பட்டுள்ளார். கொழும்பு வாசியான இவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் வந்திருந்தார். இவர் நேசப்பிரியன் என்ற பெயரில் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

மங்களனேசன் மீதான தாக்குதல் சனிக்கிழமை இரவு அரியாலைப் பிரதேசத்தில் வைத்து நடத்தப்பட்டுள்ளது. வேலை வாங்கித் தருவதாகப் பொய் கூறி பலரிடம் மங்களனேசன் பணம் பெற்றிருந்ததாகவும், அவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களே இந்தத் தாக்குதலைச் செய்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, அரியாலைப் பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டும்போது த.தே.கூ ஆதரவாளர்களுக்கும் ஈ.பி.டி.பி யினருக்குமிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் ஈ.பி.டி.பி யினருக்கு தொலைபேசிமூலம் தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து த.தே.கூ ஆதரவாளர்களைத் தாக்கியதாகவும் மக்கள் கூறுகின்றனர். எப்படியிருப்பினும், போலீசார் த.தே.கூ ஆதரவாளர்களைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*