TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஈழத்தமிழர்களை காப்பாற்ற ஐ.நா.படை செல்ல வேண்டும்

Makkalஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கையில் முள் வேலி முகாம்களில் வதைபடும் ஈழத் தமிழர்கள் துயர்துடைக்கக்கோரி சென்னையில் 24-07-2009 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வ.கம்யூனிஸ்டு செயற்குழு உறுப்பினர் மு. வீரபாண்டியன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலவர்கள், மனிதநேய ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ முழக்கங்களை எழுப்ப மற்றவர்கள் திரும்பக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து பழ. நெடுமாறன் பேசியதாவது:

3 இலட்சம் ஈழத் தமிழர்கள் முள்வேலி ஜெயிலுக்குள் அடைக்கப்பட்டு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். தினந்தோறும் 200 தமிழர்கள் இறந்து வருகின்றனர். ஈழத் தமிழர்களுக்கு உதவி வந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட அனைத்து அமைப்புகளையும் ராசபக்சே வெளியேற்றிவிட்டார்.

தமிழர்களுக்கு சிங்கள அரசு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்யவில்லை. செய்ய முயன்ற தொண்டு அமைப்புகளுக்கும் அனுமதி மறுத்துவிட்டது. 3,000 பேருக்கு ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை சாகடிக்க வேண்டும் என்பதே சிங்கள அரசின் திட்டம். தங்கள் சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். வாழ முடியாமலும், சாகமுடியாமலும் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ராஜபக்சே எதுவும் செய்யமாட்டார் என்பது திட்டவட்டமாக தெரிந்த விஷ யம், எனவே அம்மக்களை பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா. ஏற்கவேண்டும்.

அவரவர்களுக்கு உரிய சொந்த ஊரில் மக்களை குடியமர்த்தும் பணி ஐ.நா. மேற்பார்வையில் நடக்கவேண்டும். அம்மக்கள் படும் அவதிகளை இனியாவது தமிழக அரசும், மத்திய அரசும் உலக நாடுகளும் உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்கள் அனவரும் ஒன்று பட்டு நின்றால்தான் ஈழத்தமிழர்களின் துயரைத் துடைக்கமுடியும் – இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

நம் கண்முன்பே இலங்கையில் உள்ள தமிழ் இனம் அழிக்கப்பட்டுள்ளது. ரத்த சகதியில் நம் தொப்புள் கொடி உறவுகள், நம் சொந்தங்கள், குழந்தைகள், பெண்கள், சிதைத்து சின்னா பின்னமாக் கப்பட்டனர். உலகில் எங்கும் நடக்காத அவலம் நடபெற்றதை வான் வழியாக சக்தி வாய்ந்த கேமராக்கள் மூலம் இங்கிலாந்து நாட்டு பத்திரிகைகள் படமெடுத்து வெளியிட்டன.

இந்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்தது. கடைசி 10 மாதங்கள் இலங்கை அரசுக்கு எல்லா வகையான உதவிகளையும் செய்து தமிழின படு கொலைக்கு துணயைாக இருந்தது. சட்டமன்ற தீர்மானத்தை காலில் போட்டு மிதிக்கிறது தமிழ்நாட்டில் தமிழக மக்கள் அங்கு போரை நிறுத்த வேண் டும என்பதற்காக எல்லா வகையான முயற்சிகளிலும் ஈடுபட்டனர். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்த தீர்மானம், காலில் போட்டு மிதிக்கப்பட்டது.

இந்த நிமிடம் வரை அங்கு போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சிறைச்சாலையில் எந்தெந்த அடிப்படை வசதிகள் இருக்கவேண்டும் என்று ஐ.நா. பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மூன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி முள்வேளி சிறைக்குள் அடைக்கப்பட்டு மிருகங்களை விட கொடுமையாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

இலங்கை தமிழர்களுக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபை கூறிய எதையும் இலங்கை அரசு கேட்கவில்லை. தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் சிங்கள அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் அது நடக்காது. தமிழர்களுக்கான தனி தேசம் நிச்சயம் அமையும். அதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நாங்கள் செய்வோம். இங்கு வந்துள்ள அனைவரும் மாவீரர் திலகம் பிரபாகரன் உருவப்படத்தைத் தாங்கி நிற்கிறீர்கள்.

இனி வருங்கால இளைஞர்கள் எங்களைவிட வேகமாக செயல்படுவார்கள். கிழக்கு தைமூரிலும், கொசவா நாடுகளிலும் பிரச்சினை ஏற்பட்ட போது உலக நாடுகள் தலையிட்டு தீர்வுகண்டன. ஆனால் இந்திய அரசின் துரோகத்தால் இங்கு அப்படியொரு நிலை உருவாகவில்லை. ஈழத்தமிழர்களை ஆதரிக்க தாய்த்தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேரவேண்டும். இன்று காலை பத்திரிகையில் “தாயை இழந்த ஒரு குட்டி யானை பள்ளத்தில் விழுந்து தவிப்பதாகவும், அதை காப்பாற்ற மற்ற யானைகள் திரண்டு வந்து சுற்றி நின்றதாகவும் படித்தேன்.

மிருகங்களுக்கு உள்ள உணர்வு கூட நமக்கு வரவேண்டாமா? தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்து கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. இதனை அனுமதிக்க முடியாது. உலக நாடுகள் தடுக்க வேண்டும். ஐ.ந. மேற்பார்வையில் அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் அவரவர் பகுதிகளில் குடியமர்த்தப்படவேண்டும். பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் குடியேற்றங்களை அமைக்கக்கூடாது என்று உலக நாடுகள் ஓங்கிக் குரல் எழுப்பின.

அதுபோல இலங்கை அரசை உலக நாடுகள் தடுக்க வேண்டும் – இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

இந்தியாவுக்காகத்தான் நான் போரை நடத்தினேன் என்று ராசபக்சே சொன்னபோதே எல்லாம் விளங்கிவிட்டது. அப்பாவி தமிழ் மக்கள் என்ன பாவம் செய்தார்கள். 3 லட்சம் தமிழர்கள் முள்வேலி ஜெயிலுக்குள் இருப்பத பார்த்தும் உலக நாடுகள் வாய் மூடி நிற்கின்றன. கியூபா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட ஏன் என்று கேட்கவில்லை. அமெரிக்க அதிபர் ஒபாமவை நம்பினோம். அவரது சுயரூபம் தெரிந்து விட்டது.

இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒன்றாக வாழமுடியாது. அங்கு தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதுதான் ஒரே வழி. இந்திய அரசு எக்காரணம் கொண்டும் இராணுவத்தை அங்கு அனுப்பக்கூடாது. இலங்கைக்கு ரூ.500 கோடியை இந்திய அரசு வழங்குவது ஏன் என்பது பற்றிய விவரம் இப்போது தெரியவந்துள்ளது. தமிழர் பகுதிகளில் சிங்கள போலீஸ் நிர்வாகத்தை ஏற்படுத்தவே இந்த உதவி செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. ஈழத்தமிழர்களுக்காக எங்களுடைய போராட்டம் வருங்காலத்தில் தீவிரமாக இருக்கும்.

அடுத்த மாதம் 20-ம் தேதி முக்கிய பிரகடனம் ஒன்ற வெளியிட உள்ளோம். தமிழக அகதிகள் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பும் முயற்சியை அரசு கைவிடவேண்டும். – இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம், பா.ம.க. தலைவர், ஜி.கே.மணி மற்றும் வேல் முருகன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க.வை சேர்ந்த வேளச்சேரி மணிமாறன், சு. ஜீவன், கவிஞர் தமிழ் மறவன், தென்றல் நிசார், மனித உரிமை ஆர்வலர் டி.எஸ்.எஸ். மணி, அனத்திந்திய மாணவர் பெரு மன்றச் செயலாளர் திருமலை உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி: “மாலை முரசு” 24-07-09

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Articles

Your email address will not be published. Required fields are marked *

*