TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கல்லறை அற்ற காவியங்கள் – கரும்புலிகள் நாள் 2011

வேர்கள் வெளியினிற் தெரிவதில்லை – சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பேர்களைச் சொல்லவும் முடிவதில்லை –கரும்
புலிகளின் கல்லறை தெரிவதில்லை.

காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதும் இல்லை – இற்கு
வாழும் தலைமுறை சாகும் கரும் புலி
வாழ்வை அறிவதும் இல்லை
வாழ்வை அறிவதும் இல்லை – அவர்
வாசம் புரிவதும் இல்லை.

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் – ஒரு
தொட்டில் வணர்ந்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லிப் புறப்பட்டுப் போவார் – எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்.

நொடியில் பெரு வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும்
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்
மூச்சம் பெரும் புயலாகும்.

நினைவளியா நாட்களிலிருந்து………..

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Poems

Your email address will not be published. Required fields are marked *

*