TamilSpy

பொழுது போக்கு இணையம்…

பாதிக்கப்பட்ட தமிழர்களை முகாம்களில் அடைத்துவிட்டு யாருக்காக நிதி வசூல் செய்கிறார்கள்: ரணில் விக்ரமசிங்கே

Ranilஇலங்கையின் முன்னாள் பிரதமரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே போர் காரணமாக இடம்பெயர்ந்த தமிழர்களை நீண்ட காலத்திற்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும், முகாம்களில் போதிய வசதி இல்லை. அடிப்படை தேவைகளுக்கே மக்கள் அவதிப்படுகின்றனர்.

உணவு, குடிநீர் போன்றவை போதிய அளவு வழங்கப்படுவதில்லை. குறிப்பாக குடும்பத்தினர் தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரே முகாமில் வைப்பதில் அரசுக்கு என்ன சிக்கல் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இந்தியா 500 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது. உலக வங்கியிடம் உதவி கோரப்பட்டுள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழர்களை முகாம்களில் அடைத்துவிட்டு யாருக்காக இவர்கள் நிதி வசூல் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார் ரணில்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*